×

மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

காஞ்சிபுரம்: மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுகு குட்பை என்ற வாசகத்தை முன் நிறுத்தி காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஆத்மா தொண்டு நிறுவனம் இணைந்து ஏகாம்பரநாதர் கோயில் அருகே பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது. மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தார்.இதில் கிளி ஜோசிய குறு நாடகம் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதை தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், எந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பதாகைகள், பாடல், ஆடல் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிகளுக்கு குட்பை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நாராயணன், கவுன்சிலர்கள் சசிகலா கணேஷ், சரஸ்வதி பாலமுருகன், விமலாதேவி சேகரன், பூங்கொடி தசரதன், அஸ்மா பேகம், நிர்மலா, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், தொண்டு நிறுவன செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Manjapa Plastics ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...